எம்ஜிஆராக மாறிய ஆளுங்கட்சி வேட்பாளர் டிடிவி.தினகரன்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக, சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. சசிகலா அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் இன்றோடு கடைசி என்பதால், இன்று 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், மதியம் 1.30 மணிக்கு ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகம் வந்தார்.

காரில் வந்த அவர், உடனே தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு கீழே இறங்கினார். கடும் வெயிலுக்காக அவர் தொப்பி மாட்டினாரா? இல்லை எம்ஜிஆரைப் போல் பாவித்து அவர் தொப்பி அணிந்தாரா என அங்கு சலசலப்பு நிலவியது.

பின்னர் தன்னுடைய வேட்புமனுவை சுமார் 100 பேருடன் வந்து தாக்கல் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.