சவுதியில் தங்கி இருப்பவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து இலங்கைக்கு திரும்புவதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 3 மாத காலம் பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குடிவரவு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக சவுதியில் தங்கியுள்ளவர்களை எதுவித தண்டனைகளும் இன்றி, அங்கிருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலத்தின் பின்னர் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.