பாதுகாப்பான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக கூகுளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பணப் பரிவர்த்தனையை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதால் வங்கிக் கணக்கை முடக்கி முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த அச்சம் பரவலாக மக்களிடத்தில் உள்ளது.
எனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் துணைத்தலைவர் ராஜன் ஆனந்தனும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் சுந்தர்ராஜனும் கையெழுத்திட்டனர்.