எண்ணியதை நிறைவேற்றும் வன்னிமரத்தடி விநாயகர்

ஒவ்வொருவரும் வாழ்வில் கல்யாணம், புத்திரப்பேறு போன்றவற்றை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது வழக்கம். ஒரு சிலருக்கு இவை எளிதில் அமைந்து விடும். ஒரு சிலருக்கு தாமதப்படுவது வழக்கம்.

அப்படித்தாமதப்படுபவர்கள், வன்னிமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் தளர்ச்சி நீங்கும். புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். பிள்ளை வரம் கொடுப்பதால் தான் பிள்ளையார் என்ற பெயரையும் பெற்றிருக்கின்றார். தொடர்ந்து இதே நட்சத்திரம் வரும்பொழுது வழிபட்டு வந்தால் தடைகளைத் தகர்த்தெறிய முடியும்.