இலங்கை பயணம் ரத்து! பணிந்தார் ரஜினி!

இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்காக இலவச வீடுகளை வழங்குவதற்காக ஏப்ரல் 9ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதாக அறிவித்திருந்தார்.

அவரது இலங்கை பயணத்தை ரத்துசெய்யுமாறு தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும்  அரசியல் கட்சிகள் ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நான் இலங்கை செல்வதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்தனர்.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கை பயணத்தை ரத்து செய்கிறேன். மாவீரர்கள் வாழ்ந்த இடத்தை பார்ப்பதற்கே இலங்கை செல்ல இருந்தேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.