ஆர்.கே.நகர் தொகுதியில் வெளியூரிலிருந்து பலரைக் கொண்டு வந்து குவித்துள்ளனர். பல ரவுடிகளைக் கொண்டு வந்து போலீஸ் குடியிருப்பிலேயே தங்க வைத்துள்ளதாக ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதியில் யாராவது உள்ளூர்க்காரன் இருக்கிறானா. ஆயிரக்கணக்கில் வெளியூர்களிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்தான் வந்துள்ளனர்.
தினசரி பணப் பட்டுவாடா நடக்கிறது. 500, 1000 என கொடுத்துக் கொண்டுள்ளனர். ரவுடிகளைக் குவித்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ரவுடிகளாக உள்ளனர்.
போலீஸ் குடியிருப்பிலேயே ரவுடிகளைத் தங்க வைக்கிறாங்கய்யா. தண்டையார்ப்பேட்டை போலீஸ் குடியிருப்புக்குப் போய்ப் பாருங்க. எங்கெல்லாம் போலீஸ் குடியிருப்பு காலியாக உள்ளதோ அங்கெல்லாம் தங்க வைக்கின்றனர் என்றார் மதுசூதனன்.