ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக அம்மா அணி சார்பில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, அதிமுகவை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுகவை அழிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் எங்கள் எம்.எல்.ஏக்களுடன் சிலர் மூலம் பேசி வருகிறார். அதிமுகவை யாரும் அழிக்க முடியாது. தொப்பி சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பேன்.
ஆர்.கே. நகர் தொகுதியில் எனது வெற்றி நிச்சயம். நான் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நான் பணம் பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.