டி.டி.வி. தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- ஆர்.கே.நகர் தொகுதி புரட்சித்தலைவி அம்மாவின் தொகுதி. இந்த தொகுதியில் 1996-க்கு பிறகு வெற்றி பெற முடியவில்லை. மறைந்த முதல்வர் இத்தொகுதியில் செய்த திட்டங்கள் எனக்கு வெற்றியை தேடித்தரும்.
கே:- நீங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறதே?
ப:- வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்த தொகுதியில் மறைந்த முதல்வர் அம்மாவின் சாதனை திட்டங்களுக்கு மக்கள் தாமாக முன்வந்து வாக்களிப்பார்கள்.
கே:- உங்கள் மீது பல்வேறு புகார்களை கூறி முடக்கப் பார்க்கிறார்களா?
ப:- அரசியல் வியாபாரத்திற்காக என்னை முடக்க பார்க்கிறார்கள். அது நடக்காது. இங்கிருந்து பிரிந்து சென்ற துரோகிகளோடு எதிரிகளும் சேர்ந்து சதி செய்கிறார்கள்.
ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவின் ஆசியோடு நான் வெற்றி பெறுவேன். ஏப்ரல் 12-ந் தேதிக்கு பிறகு எதிரிகளின் கூடாரம் காலியாகி விடும்.
கே:- முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டும் பெற முயற்சி செய்கிறீர்களா?
ப:- துரோகிகளின் செயலால் இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புரட்சித் தலைவர், அம்மாவின் ஆசி பெற்ற ‘தொப்பி’ சின்னம் எனக்கு கிடைத்துள்ளது. இதில் வெற்றிபெற்று இரட்டை இலையை மீட்டெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.