பன்னீர் – எடப்பாடி ரகசிய சந்திப்பு,.? டீல் ஓகே, அதிமுகவில் சசி குடும்பத்துக்கு கல்தா..!

தமிழகத்தில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. தூங்கி எழுந்தால் யார், யாருடன் இருப்பா், யார், யாருக்கு குழிப்பறிப்பார் என்று தெரியாத நிலை உள்ளது.

நினைக்கும் கேடு தனக்கே என்கிற பழமொழி உண்டு. அதற்கு ஏற்பதான் தற்போது சசிகலா குடும்பம் உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போயஸ் கார்டனில் சிறைகைதியாகத் தான் நடத்தப்பட்டாராம். ஜெயலலிதா எதை சொன்னாலும் அதற்கு எதிராகத் தான் சசிகலா செய்வாராம். ஆனால் ஜெயா முன்பு நல்லவர் போல நடிப்பாராம்.

அதே கதைதான் தற்போது சசிகலா குடும்பத்தில் நடந்து வருகிறது. சசிகலா தற்போது சிறையில் உள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட தினகரன், சசிகலா சொல்வதைத் தான் செய்கிறேன் என்று கூறுகிறாராம். ஆனால் சசிகலாவின் விருப்பத்திற்கு நோ்மாறாகத் தான் செய்து வருகிறாராம்.

பன்னீர்செல்வத்தை காலி செய்துவிட்டு, தான் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்பட்டார் எடப்பாடி. ஆனால், இன்று எடப்பாடியை காலி செய்துவிட்டு தான் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் தினகரன்.

பன்னீர்செல்வம் விட்டு சென்றதைப்போல தானும் செல்லக்கூடாது என்று முடிவு செய்துவிட்டாராம் எடப்பாடி. முதல்வா் பழனிச்சாமி, ஆட்சி என்னுது, கட்சி ஒன்னுது என்று பன்னீரிடம் டீல் ஓகேவாகி விட்டதாம். இவ்வாறு அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது யார், யார் பக்கம் போவது என்பதையும் முடிவு செய்துவிட்டார்களாம்.

அதை முடிவு செய்வது இடைத் தோ்தல் முடிவாம். எடப்பாடி அணியில் உள்ள வேட்பாளா் தினகரன் அதிக வாக்கு வாங்கினால், பன்னீர் அணியினர் எடப்பாடி அணியிடம் வந்து சேர்ந்து விட வேண்டுமாம்.

பன்னீர் வேட்பாளா் அதிக வாக்கு வாங்கிவிட்டால், எடப்பாடியிடம் உள்ள அனைவரும் பன்னீர் அணிபக்கம் வந்துவிட வேண்டுமாம்.

இப்படியாக இருவரும் ஒன்று சோ்ந்து சசிகலா கும்பலை அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்த திட்டம் தீட்டி விட்டார்களாம்.

பிறகு என்ன சசி குடும்பத்துக்கு கட்டம் கட்டப்பட்டு விட்டது. இனி கல்தா கொடுத்து வெளியே அனுப்புவதுதான் பாக்கியாம். என்ன கொடுமை சார் இது?