முல்லைத்தீவு – வட்டுவாகல் கடற்படைத் தளம் பாதுகாப்பற்ற பகுதியாக கடற்படையினரால் இன்று (25) அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கல் வரை உள்ள மக்களின் 657 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியை பாதுகாப்பற்ற பிரதேசமாக கடற்படையினர் கூறியுள்ளதுடன், அறிவித்தல் பலகையும் நட்டு தெரியப்படுத்தியுள்ளனர்.
காணிகளை கடற்படையினரின் தேவைக்கு வழங்குமாறும் அதற்கு பதிலாக மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பொதுமக்களுடன் உயர் அதிகாரிகள் அன்மையில் பேச்சுவர்த்தை நடாத்தியபோது அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று படையினர் இவ்வாறு அறிவித்துள்ளது தமது காணிகளை கடற்படையினர் கையளிக்க மறுப்பதன் வெளிப்பாடாகவே கருதமுடிம் என காணி உரிமையாலர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, தமது காணிகளை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.