விமல் வைத்தியசாலையில் அனுமதி.. உயிருக்கு ஆபத்தா?

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச, சற்று முன்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

தன்னை விளக்கமறியலில் வைத்து 70 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையில் பிணை வழங்கப்படவில்லை என வீரவங்ச ஆட்சேபம் தெரிவித்துள்ளார். பிணை வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாக

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் வீரவங்ச உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்,விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.