பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ‘பாகுபலி 2’ பாடல்களை வெளியிடும் ரஜினி, விஜய்?

2017-ஆம் ஆண்டின் பிரம்மாண்ட படங்களுள் ஒன்றான ‘பாகுபலி 2’ ஏப்ரல் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. எஸ்.எஸ்.  ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ‘டிரைலர்’  ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது உலக அளவில் அதிகமாக பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற சாதனையை  படைத்திருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு  திட்டமிட்டது. இதனையடுத்து, தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.  அதனைத்தொடர்ந்து தமிழில் ஏப்ரல் 8-ந்தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி  மற்றும் விஜய் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படகலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ‘பாகுபலி-2’ இந்தியா  முழுவதும் பல்வேறு மொழிகளில் 6 ஆயிரத்து 500 தியேட்டர்களில் திரையிடப்படுவது குறி்ப்பிடத்தக்கது.