5 கதாபாத்திரத்தில் ரஜினி, 12 லுக்கில் அக்ஷய்குமார்: எதிர்பார்ப்பை அதிகமாக்கும் 2.ஓ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 2.ஓ. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினி 5 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கெனவே எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ, வசீகரன் என்ற இரண்டு கெட்டப்புகளில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் தொடர்கிறது. அதைத் தொடர்ந்து வில்லத்தனமான ஒரு கெட்டப்பிலும் ரஜினி இப்படத்தில் வருகிறாராம். அதுமட்டுமில்லாம், ‘அபூர்வ சகோதரர்கள்’ குட்டை கமல் மாதிரி இரண்டு கதாபாத்திரங்களும் ரஜினிக்கு இருக்கிறதாம்.

ரஜினி 5 கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றால், அவருக்கு போட்டியாக அக்ஷய்குமாருக்கும் இந்த படத்தில் 12 விதவிதமான லுக்கில் வருகிறாராம். ஏற்கனெவே, பறவை போன்ற ஒரு உருவத்தில் அவருடைய தோற்றத்தை போஸ்டராக வெளியிட்டிருந்தனர். அதோடு சேர்ந்து மொத்தம் 12 லுக்கில் இந்த படத்தில் அக்ஷய்குமார் வருவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், ஏமி ஜாக்சனுக்கும் இரண்டு கெட்டப்புகள் உள்ளதாம். அதில் ஒன்றுதான் ரோபோ கெட்டப்பாம். இப்படியாக, படத்திற்கு மேலும் மேலும் பிரம்மாண்டம் கூடிக்கொண்டே போவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஆசியா கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்டங்கள் எல்லாம் ரசிகர்களை எந்தளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.