டொனால்டு டிரம்ப் மீது இங்கிலாந்து நடிகை பாலியல் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரபல வர்த்தகர். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அவர் மீது பல பெண்கள்’ செக்ஸ்’ புகார் கூறினார்கள். அவற்றை டிரம்ப் மறுத்தார்.

இந்த நிலையில் அவர் மீது இங்கிலாந்து நடிகை ஒருவரும் ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். அவரது பெயர் எம்மா தாம்ப்சன். தற்போது அவருக்கு 57 வயது ஆகிறது.

கடந்த 1998-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ‘பிரை மரி டவர்ஸ்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தார். அப்போது இவர் தனது கணவர் கென்னத் பிரனாக் என்பவரை விவாகரத்து செய்து இருந்தார்.

அப்போது டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தகராக இருந்தார். ஒரு நாள் திடீரென அவரிடம் இருந்து நடிகை எம்மா தாம்ப்சனுக்கு டெலிபோன் வந்தது.

மறு முனையில் பேசிய டிரம்ப் நடிகை எம்மாவை ஒரு நாள் தன்னுடன் ‘டேட்டிங்’ பழகுவதற்கு மற்றும் விருந்துக்கு வருமாறு அழைத்தார். நியூயார்க்கில் உள்ள தனது டிரம்ப் டவரில் அதற்கான ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார்.

இத்தகவலை சமீபத்தில் பங்கேற்ற சுவீடன் டெலிவி‌ஷன் நேர்காணல் நிகழ்ச்சியின் போது நடிகை எம்மா கூறினார். அவரது அழைப்பு தனக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அளித்ததாகவும் கூறினார். ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

அப்போது டிரம்ப் தனது 2-வது மனைவி மரியா மாப்ளசை விவாகரத்து செய்து தனிமையில் இருந்தார். 2005-ம் ஆண்டில் தான் மெலானியாவை 3-வது திருமணம் செய்து கொண்டார்.