கல்யாணத்துக்கு ரெடியாகும் அனிருத்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உறவினரான அனிருத் ரவிச்சந்திரன், ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ஓய் திஸ் ‘கொலவெறி டி என்ற பாடல் மூலம்  தனக்கு என தமிழில் ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்

நடிகர் விஜய் நடித்த கத்தி படத்திலும், அஜித் நடித்த வேதாளம் படத்திலும் இசையமைத்து முன்னணி இசைமைப்பாளர்களை தனது திறமையால் மிரட்டினார்.

சமீபத்தில் பீப் பாடல், நடிகைகளுடன் நெருக்கம் உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கினார். தற்போது நடிகர் அஜித்தின் விவேகம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற படங்களுக்கு இசையமைத்து பிஸியாக உள்ளார்.

பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரின் மகளை அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மருமகன் அனிருத்துக்காக அந்த நகைக்கடை அதிபர், ஒரு பெரிய ஸ்டுடியோ ஒன்றையும் அமைத்து கொடுத்துள்ளதாகவும், இந்தாண்டுக்குள் திருமணத்தை முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.