வடக்கு இராணுவக் கட்டளைத்தளபதியாக தர்சன ஹெட்டியாரச்சி நியமனம்!

வடக்குப் பிராந்தியத்துக்கான இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு இராணுவக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இராணுவத்தின் பிரதான அலுவலர் (சீப் ஓப் ஸ்டாப்) பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்துக்கே தர்ஷன ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி இன்று தொடக்கம் வடக்கில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவர் கிழக்குப் பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதியாக இரண்டு வருடங்கள் அளவில் கடமையாற்றியிருந்தார்.

அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரிடையே நல்லுறவொன்றை ஏற்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது