2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொழும்பு பிரதேச பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளை இன்று வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடதிட்டங்களுக்கு அமைய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் வரை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.