இலங்கையில் இரண்டு தரப்பினரும் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளபோர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் அந்த நாட்டின் மறுசீரமைப்பு மற்றும்நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பிரதான கருவாக மாறி வருகிறது
ஆங்கில இதழொன்றின் விமர்சன கட்டுரை ஒன்றில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பினரும்போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் விசாரணையைவலியுறுத்தி வருகின்றன.
2015ம் ஆண்டு ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இது தொடர்பாக2015ம் ஆண்டு யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த யோசனையை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் கடந்த வாரத்தில் மேலும் இரண்டுவருடகால அவகாசத்தை கோரி அதனையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளை மேம்படுத்த ஜெனீவா யோசனையின்போர்க்குற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமானது என்று குறித்த ஆங்கிலதாள் குறிப்பிட்டுள்ளது