ஓபிஎஸ் அணி இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு… ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கான வாக்குறுதி இதுதான்!!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியின் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. வரும் 12ம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் சசிகலா அணி, அதிமுக அம்மா என்ற பெயரில், போட்டியிடுகிறது. ஓபிஎஸ் அணியினர் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அதிமுக அம்மா கட்சியினர் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இதனையடுத்து, இன்று ஓபிஎஸ் அணியான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளது.

இந்தத் தேர்தல் அறிக்கையில், இந்த தொகுதிக்கு ஜெயலலிதா செயல்படுத்த திட்டமிட்டு இருந்த திட்டங்கள் அனைத்தும் இடம் பெறும். குறிப்பாக இந்த தொகுதியில் தொழில் வளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

ஜெ.வின் மரண மர்மம் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி கேட்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திட்டங்களும் இதில் வெளியாகும் வாய்ப்புள்ளது. அடிப்படைப் பிரச்சனைகள் இதுதவிர, ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகளை தீர்க்கப்படாமலேயே உள்ளது.

அவைகள் அனைத்தும் தீர்க்க தேர்தல் அறிக்கையில் உறுதி வழங்கப்படலாம். நெடுங்கால பிரச்சனையான இதனை ஓபிஎஸ் அணியினர் தீர்க்க வாக்குறுதி அளிப்பார்கள். மீன்பிடி தொழில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மிக மோசமான நிலையிலேயே இன்னும் உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏவான ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.

அப்போது கூட மீன்பிடி துறைமுக பிரச்சனைகள் அவர் தீர்க்கவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் ஓபிஎஸ் அணியினர் மீன்பிடி கட்டமைப்பு தொழிலை மேம்படுத்த தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் அளிப்பார்களா என்று பார்ப்போம்.