பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பெற்ற வெற்றிக்காக மோடிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் அஞ்சேல மெர்கல் இருவரது தேர்தல் வெற்றிக்கு தொலைபேசி உரையாடல் மூலம் வாழ்த்து கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மோடியின் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் கடந்த ஜனவரி 24-ம் தேதி தொலைப்பேசியில் உரையாடினர். அப்போது தீவிரவாதத்திற்கு எதிரான போர் குறித்து பேசினர்.
அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தொலைபேசி மூலம் பேசிய 5-வது சர்வதேச தலைவர் பிரதமர் மோடி ஆவார்.