10 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் டுவைன் பிராவோ பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
ஐ.பி.எல் போட்டிகலில் சென்னை அணிக்காக விளையாடிய பிராவோ தற்போது சென்னை அணியின் தடை காரணமாக குஜராத் அணிக்காக விளையாடுகிறார்.
அந்தவகையில் கடந்த பிக்–பாஷ் T–20 தொடரில் மெல்போர்ன் ரேனிகேட்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட, தொடரில் இருந்து பாதியில் விலகினார்.
இந்நிலையில் தற்போது அவரது தொடை பகுதியில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அவர் ஐ.பி.எல் தொடரின் முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
குஜராத் அணிக்காக விளையாடி பல வெற்றிக்கு வழியமைத்து கொடுத்த பிராவோ இம்முறை இல்லாதது, இந்த அணிக்கு இழப்பு தான். மேலும் குஜராத் அணிக்கு சுரேஷ் ரெய்னா தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.