முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து நடிகர் கருணாஸ் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்து திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு நடிகர் கருணாஸ் வெற்றிபெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த இவர், கடந்த வாரம் தனது கட்சியில் உள்ள நிர்வாகிகளை நீக்கினார்.
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் பொறுப்பில் இருந்து கருணாஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் கூட்டாக சேர்ந்து மதுரையில் இதனை அறிவித்துள்ளனர்.
புதிய தலைவராக சந்தனகுமாரை நியமித்து செயற்குழுவில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.