`வட சென்னை’ படத்தில் தனுஷ் – விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முடியவுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் `வடசென்னை’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
முன்னதாக முதற்கட்ட படப்பிடிப்பின் போதே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்த படக்குழு, விஜய் சேதுபதி மார்ச்சில் பங்கேற்பார் என்று கூறியிருந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போவதாலும், மற்ற படங்களில் தான் ஒப்பந்தமாகி இருப்பதாலும் `வடசென்னை’ படத்தில் நடிக்க தேதி இல்லை என்று கூறி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
விஜய் சேதுபதி நடிப்பில் ‘கவண்’ மார்ச் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக ‘கருப்பன்’, ‘விக்ரம்-வேதா’, ’96’, ‘அநீதி கதைகள்’ உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். ‘புரியாத புதிர்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.