தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் நடிகர் சூரியின் தந்தை நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 75 வயதாகும் முத்துச்சாமி சுவாசக்கோளாறு பிரச்சனையால் தவித்து வந்த அவர், நேற்று இரவு சுமார் 10.15 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்க மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள தாமரைப்பட்டியில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
சூரியின் தந்தை மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.