சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த ‘அப்பா’ படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு ‘ஆகாச மிட்டாயீ’ என்று பெயர் வைத்துள்ளனர்.
சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, வரலட்சுமியே தனது விளக்கத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது என்று கூறி வெளியே வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய இந்த முடிவுக்கு ஓகே சொன்ன ஜெயராம், சமுத்திரகனி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.