இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக  பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவதுபோலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச்சடங்குகள் செய்வதுபோலவும் இருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வந்தபோது, ஏ.ஆர்.ரகுமான் விடுத்த அழைப்பின்பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு அவர் சென்றதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், சூர்யா எந்த மதத்திற்கும் மாறவில்லை என்றும், அதுகுறித்து வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மதம் மாறியதாக கூறி வெளியான வீடியோ