தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 2
புதினா இலை – சிறிதளவு
பனை வெல்லம் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
பால் – 1/2 கப்
ஏலக்காய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை :
* பனை வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.
* பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.
* அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, பனை வெல்லம், உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.
* அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
* சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!