சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ!

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சுத் தோல் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

* ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.

* இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

* பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.