ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரு அணியினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து இருந்தனர்.
ஆனால் தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. எனவே இரு அணியினரும் புதிய கட்சி மற்றும் புதிய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இரட்டை இலை முடக்கம் குறித்து சுப்பிரமணியன் சாமி கூறும்போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் தவறு செய்து விட்டது. நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள சசிகலாவுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். பா.ஜ சார்பில் பன்னீர் செல்வத்தை முதல்வராக்க முயற்சித்தோம் என்றார்.