இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது,
1971-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தீர்ப்பானது எந்த அணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் ஒதுக்க வேண்டும் என்கிறது. அதனடிப்படையில் சசிகலா அணிக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும்.
சசிகலா அணியில்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் எம்.எல்.ஏக்களே இல்லை.
இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறானது என்றுதான் சொல்வேன். இரட்டை இலையை முடக்க பாஜக நிர்பந்தம் செய்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அது தெரிந்திருக்கும் இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.