ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளை!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளை போன நாணயம் கனடா அரசால் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘பெரிய பனை ஓலை’ என பெயரிடப்பட்டிருந்தது.

அதில் ராணி 2-வது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. சுத்த தங்கத்தால் இது உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

53 சென்டி மீட்டர் நீளமும், 3 சென்டி மீட்டர் பருமனும் கொண்டது. இது ‘புல்லட் புரூப்’ கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

அருங்காட்சியகத்தின் ஜன்னலை உடைத்து ஏணி மூலம் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தில் உலக நாடுகளின் நாணயங்கள் சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வகை நாணயங்கள் உள்ளன.