மக்களுக்காகவே உழைப்பேன்’.. ஜெயலலிதா பாணியில் ஆர்.கே. நகரில் ஆவேசமாக பேசிய தீபா!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.

அவருக்கு படகு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை மக்களிடம் அறிமுகம் செய்து தேர்தல் அறிக்கையை நேற்று தீபா வெளியிட்டார். முதல் முறையாக ஆர்.கே. நகர் பொதுக் கூட்டத்தில் பேசிய தீபாஇ தனது அத்தையான ஜெயலலிதா பேசுவது போன்றே ஆவேசமாக பேசினார். குறிப்பாக ‘மக்களுக்காகவே நான்’ என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறுவது போன்றே தீபாவும் மேடையில் பேசி வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டார்.

மேலும் அவர்இ “நீங்கள் பெற்றெடுக்காத குழந்தை நான். உங்களுக்காக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். உங்களின் ஒருத்தராய்இ உங்கள் முன்னேற்றத்தில் அக்கறையோடு இவ்வுயிர் மூச்சு உள்ளவரை மக்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியாலும் என்னை உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது” என்று கூறினார்.

பொதுக் கூட்டத்தில் மறக்காமல் சசிகலா தரப்பை போட்டுத் தாக்கிய தீபாஇ “துரோக கும்பலின் முகத்திரையை கிழிப்பேன். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவேன்” என்று சூளுரைத்தார். முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் தீபா பேசியதால் தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.