இன்றைய ராசி பலன்கள் 29.03.2017

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக  கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். மதியம் 1.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும்  எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். புது அனுபவம் உண்டாகும். உறவினர் கள் மதிப்பார்கள்.  வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து  ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன்  பெருகும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும்.பழைய சிக்கலில் ஒன்று தீரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து  நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்:  மதியம் 1.00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப் பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். செலவினங்கள் அதிகரிக்கும்.  உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக  விமர்சனங்கள்  உண்டு. மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம்  வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது  அதிகாரி மதிப்பார். மதியம் 1.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்:  பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம்  ஏற்படும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். சுற்றியிருப் பவர்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு செயல் படுவீர்கள். அக்கம்-பக்கம்  வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத் தது நிறைவேறும் நாள்.

  • தனுசு

    தனுசு: மனதிற்கு பிடித்த வர்களை சந்திப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் வீண்  டென்ஷன் வந்துப் போகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்  பதவியில் இருப்பவர் களால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத் யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி  பெறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் சிலர் வலிய வந்து  பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான  நாள்.

  • மீனம்

    மீனம்:  மதியம் 1.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட  வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற  வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.