மஹிந்தவை காட்டிலும் சிராந்திக்கு அதிக பாதுகாவலர்கள் இருந்தனர்!

முன்னாள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் பாரிய தொகை அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இருந்தபோதும் அவருக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பை அவரால் இயல்புக்கு கொண்டுவர முடியவில்லை.

இந்தநிலையில் நடைமுறை அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு எதிரான நிலைமைகளை சமாளித்து செல்வதாக சமரவீர ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் 12 நாடுகளின் ஆதரவை மாத்திரமே தக்கவைக்க முடிந்தது. இதற்காக அவர் பாரிய தொகை அரசநிதியை செலவிட்டார்.

2010ம் ஆண்டு அவர் ரஸ்யாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது 38.5மில்லியன் ரூபா செலவிடப்பட்டன.

யுக்ரெய்னுக்கு சென்ற போது 49 மில்லியன் ரூபாய்களை செலவிட்டார்.

2012ம் ஆண்டு ஜெனீவாவுக்கு சென்ற போது 76 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டன.

எனினும் இந்த தடவை நடைமுறை அரசாங்கம் ஜெனீவாவுக்கு 5.5 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே செலவிட்டது.

இதேவேளை மஹிந்த ராஜபக்சவை காட்டிலும் அவருடைய மனைவி சிராந்தி ராஜபக்ச அதிக மெய்பாதுகாவலர்களை கொண்டிருந்ததாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.