முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை வீட்டில் வசித்து வருகிறார். 2011 – 2016 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கட்சி தமிழகத்தை ஆண்ட போது நிதி அமைச்சராக இருந்தாவர் ஓபிஎஸ். அப்போதிலிருந்தே தென்பெண்ணை வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
அடுத்த தேர்தலிலும் அதிமுக வென்றதால் தொடர்ந்து அந்த வீட்டிலேயே குடியிருந்து வருகிறார் ஓபிஎஸ். இந்நிலையில், ஜெயலலிதா மறைந்ததால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. மேலும், சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஓபிஎஸ் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். எம்பிகளும், எம்எல்ஏக்களும், அடிமட்ட அதிமுக தொண்டர்களும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக உள்ளனர்.
சசிகலா மீது குற்றச்சாட்டுக்களை வைத்த பின்னர், தமிழக அரசும், சசிகலா தரப்பினரும் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு வகைகளில் தொந்தரவுகள், மிரட்டல்களை விடுத்து வந்தனர். இறுதியாக கீரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினார்கள் புதுவீடு இதனையடுத்து, போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து ஓபிஎஸ் அங்கு குடியேறினார்.
எனினும், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து, தென்பெண்ணை வீட்டிற்கு வந்தபடி உள்ளனர். ஆலோசனை அதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை தென்பெண்ணை வீட்டை தொண்டர்களை சந்திக்கும் இடமாக பயன்படுத்திக் கொள்ள ஓபிஎஸ் தரப்பினர் முடிவு செய்தனர்.
இதனை அடுத்து கிரீன்வேஸ் சாலை வீட்டை ஓபிஎஸ் முழுமையாக காலி செய்யவில்லை. அங்குதான் தொடர்ந்து தொண்டர்களை அவர் சந்தித்து வருகிறார். மேலும் பல முக்கிய ஆலோசனைகளும் அங்குதான் நடைபெற்று வருகிறது. மீண்டும் நோட்டீஸ் இதனையடுத்து, ஓபிஎஸ்ஸுக்கு , பொதுப்பணித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் இரண்டு வாரங்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொண்டர்கள் அதிகமாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டே இருப்பது சசிகலா தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பக் காரணம் என்று கூறப்படுகிறது.