நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
பல்வேறு இன, மதக் குழுக்களுக்கு இடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
இதன் ஊடாக ஏற்படுகின்ற ஒற்றுமை மற்றும் மறுசீரமைப்பு போன்றவை நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு முக்கிய பங்கினை வகிக்கும்.
அனைத்து இனங்களை ஐக்கியப்படுத்தியே இலங்கையின் அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கும் இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகள் தணிக்கப்பட்டு, ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.