தற்போது பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகளை நாம் அதிகளவில் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடையானது கூடுகிறது.
இதனால் இரத்தக்குழாய்களில் இரத்த ஓட்டமானது தடைப்பட்டு மாரடைப்பு போன்ற இதய சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகிறது.
கொழுப்பினால் ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க நாம் கட்டாயம் எடுத்துகொள்ளவேண்டிய உணவுகள்.
சியா விதைகள்
சியா விதைகளில் உள்ள ஓமேகா-3 னது இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு கொழுப்பினை குறைத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் சீரற்ற இதய துடிப்பினை சரிசெய்கிறது.
இதில் உள்ள மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸைடுகள், புரோட்டின்கள், மினரல்கள், கால்சியம், இரும்பு போன்றவை இதயநோய் ஏற்படுவதை தடுத்து இதயத்தினை பாதுகாக்கிறது.
க்ரீன் டீ
க்ரின் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸைடுகள் என்று அழைக்கப்படும் பாலிபினால்கள் மற்றும் கேட்சின்ஸ், செல் சிதைவு ஏற்படுவதை தடுத்து இதயத்தினை பாதுகாக்கிறது.
மேலும், க்ரீன் டீ அருந்துவோர்க்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவது மிக குறைவாகும்.
நட்ஸ்கள்
பாதாம், முந்திரி, வால்நட் போன்றவைகளில் இதயத்தினை வலுப்படுத்தும் தன்மையுள்ள ஓமேகா-3 ஆனது உள்ளது. இது இதயத்துடிப்பினை சீர்ப்படுத்துவதுடன், இரத்தக்குழாய்களில் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
டயட்டில் உள்ளவர்கள் நட்ஸ்களை உட்கொள்ளும்போது குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொழுப்பினை குறைப்பதால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பெர்ரிஸ்
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, அகாய் பெர்ரிகளில் உள்ள ப்ளோவானாய்டுகள் இரத்த அழுத்தத்தினை குறைத்து, இரத்த குழாய்களை விரிவடைய செய்து இரத்த ஓட்டத்தினை சீராக்குகிறது.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரியானது தமனிகளை விரிய செய்து, நோய் தொற்றிலிருந்து காக்கிறது.
சிட்ரஸ் ஆசிட் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றில் உள்ள விட்டமின் சி யானது இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது.
உருளைகிழங்கு
உருளைகிழங்கினை அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது என்ற தவறான கருத்தானது நம்மில் பலரிடையே உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு.
உருளைகிழங்கில் உள்ள பொட்டாசியம், பைபர், கால்சியம், விட்டமின் பி, போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இவை இரத்த அழுத்தத்தினை குறைப்பதுடன், பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.