ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படும் அமைச்சுப் பதவிகளை சுதந்திரக் கட்சிக்கு வழங்க வேண்டாம் என, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்தால் அது கட்சிக்குள்ளேயே மாற்றம் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 20 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பிரதமரை, பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகள், சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்டால் கட்சியின் ஆதரவாளாகள் அதிருப்தி அடையக் கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.