ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
வழக்கொன்று நிமித்தம் இன்று கொழும்பு நீதிமன்றம் சென்று திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும், பொதுஜன பெரமுன நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யும், பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்யும் எந்தவொரு அரசிற்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை.
அதே சமயம் தனிப்பட்ட எவர்மீதும் எமக்கு கோபம் இல்லை, மைத்திரிபால சிறிசேனவிற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அவருக்கு எதிரியில்லை.
ஆனால் தேர்தலை காலம் கடத்திக் கொண்டிருப்பது போன்ற முறையற்ற நடவடிக்கைகளையும், மைத்திரியின் செயற்பாடுகளையும் மட்டுமே எதிர்க்கின்றோம்.
இப்படியான அரசிற்கு நாம் ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.