கன்னத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க என்ன செய்ய வேண்டும்?

சிலரின் கன்னங்கள் கொழுகொழுவென்று பெரிய அளவில் வீங்கியது போன்று காணப்படும்.

அதற்கு அவர்கள் கன்னத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளே காரணமாகும்.

இதனால் அவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாக கன்னக் கொழுப்புகள் இருக்கும்.

எனவே அவ்வாறு உள்ள கன்னத்தின் கொழுப்புகளைக் கரைக்க எளிமையான பயிற்சி முறைகள் இதோ!

கன்னத்தில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க என்ன செய்ய வேண்டும்?
  • முதலில் இரு கன்னங்களையும் சப்பையாக வைத்து, உதட்டைக் கூப்பி, 30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு, உதடுகளை அப்படியே வைத்து, பின் உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும். இதே போல தொடர்ந்து காலை, மாலை பத்து முறை செய்ய வேண்டும்.
  • வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக் கொண்டு இரு உதடுகளையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்து, பின் காற்றை ஒருபுறக் கன்னத்தில் இருந்து மறுபுற கன்னத்துக்கு மாற்றி மாற்றி தினமும் 5 நிமிடம் செய்ய வேண்டும்.
  • மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு மெதுவாக வாய் வழியாக மூச்சை விட வேண்டும். இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை என்று 4 முறைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • தலையைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்த்து, உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் உதடுகளை பத்து நிமிடங்கள் வரை குவித்து வைத்து, பின் உதடுகளை விடுவிக்க வேண்டும்.
  • கன்னங்களைச் சுற்றி எண்ணெய் தடவி, கன்னங்கள் அகலும் அளவுக்கு உதடுகளை விரித்து சிரிப்பதை போல வாயை 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு

நமது முகத்தில் 5௦-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளது. எனவே மேலே கூறப்பட்டுள்ள பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தால், கன்னத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிதில் கரைத்து விடலாம்.