இன்றைய ராசி பலன்கள் 31.03.2017

  • மேஷம்

    மேஷம்: மாலை 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைகற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 3.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கடகம்

    கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: மாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். முன்கோபத்தை குறையுங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். மாலை 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். கடின முயற்சியால் முன்னேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முடிவுகள் எடுப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.