யார் உண்மை தமிழர்கள்! மீண்டும் ஒரு யுத்தம் பூதாகரமாக வெடிக்கும்!!

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது விட்டால் மீண்டும் ஒரு யுத்தம் பூதாகரமாக வெடிக்கும் என்பது உண்மை. நீண்டகாலமாகவே விசாரணைகள் எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே சென்று கொண்டிருக்கின்றது.

இப்படியான சூழலில் அரச சொத்துக்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி அரசுக்கு 9 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வீரவங்ச, பிணை மறுக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்குரியது என அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உண்மையில் அரசியல் கைதிகள் யார்? தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா?

எல்லாவற்றையும் இழந்து அடிமைகளாக வாழும், உண்மை தமிழர்கள்தான் இன்று அரசியல் கைதிகள். விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைச் சிறைச்சாலைகளில் கடத்தி விட்டனர்.

எஞ்சியுள்ள வாழ்க்கையையேனும் நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பும் கானல் நீராகிக் கொண்டேயிருக்கின்றது. உண்மையில் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

எது எப்படி இருந்த போதிலும் பல ஆண்டுகளாக எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய கோரி பல தடவைகள் மாத கணக்கில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை. நல்லாட்சி மலர்ந்த கையோடு அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் விடிவு பிறக்கும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

எனினும் இதுவரை அது தொடர்பான எவ்வித சமிக்ஞையும் புலப்படாதிருப்பது தமிழ் மக்களை மேலும் விரக்தியடையச் செய்துள்ளது.

அன்று தனி ஈழம் கோரியிருக்கலாம். ஆனால் இன்று தனது தாயையும், பிள்ளைகளையும், உறவுகளையும் பார்த்தால் மட்டுமே போதும் என நினைக்கும் தமிழன்தான் இன்று அரசியல் கைதி.

இவன், இன்று கோருவது தனி ஈழம் இல்லை. விடுதலையைதான் அப்படி நினைப்பவன்தான் அரசியல் கைதி. நல்லிணக்கத்தை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது என்றால் எவ்வித நிபந்தனைகளுமின்றி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். ஆனால் அரசு மௌனம் காக்கின்றது.

யுத்தகாலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் தமிழ் மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக வாடும் நிலை ஏற்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இன்றும் பூட்டப்பட சிறைக்கதவுகள் திறக்கப்படவில்லை.

இவ்வாறு தமிழர்கள் சிறையில் வாட உண்மையில் குற்றங்களை செய்து கொண்டு வெளியில் நடமாடும் அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்க்கைய வாழ்கின்றார்கள்.

9 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வீரவங்ச சிறையில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வீரவங்சவுக்கு தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தந்திரமான நடவடிக்கையில் விமல் வீரவங்ச ஈடுபட்டுள்ளதாக பல்வோறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அது அப்படி இருக்க , அரசியல் கைதி கேட்பது தனி ஈழக் கோரிக்கை அல்ல. தனி மனித கோரிக்கைதான் இதற்கு நல்லாட்சி அரசு இறுதியான ஒரு முடிவை வழங்க வேண்டும் என்பதுதான் அரசியல் கைதிகளின் கோரிக்கை.

காலத்துக்கு காலம் விடுதலைக்காக தமிழர்கள் ஒவ்வொரு பகுதிகளில் போராடுகின்றனர். இதையை நல்லாட்சி அரசியானால் ஈடுக்கொடுக்க முடியாதுள்ளது.

ஓட்டு மொத்த தமிழனும் ஒன்றினைந்தால் நல்லாட்சி அரசின் நிலை என்னவாகும். இத்தனை நாட்களும் பொருத்திருக்கும் தமிழர்கள் போராடி தமது உரிமைகளை பெறதுணிந்து விட்டனர்.

இதற்கு எடுத்துக்காட்டுதான் முல்லைத்தீவு கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை மக்கள் போராடி வென்றனர்.

இன்றும் தமிழ் மக்கள் தமது சொந்த நிலைங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள போராட்டங்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றானர். அடுத்த போராட்டம் எப்படி இருக்கும் என்றால் ஓட்டு மொத்த தமிழர்களின் இணைப்பாக இருக்கும்.

ஓட்டு மொத்த தமிழனும் ஒன்றினைய போகும் நாள் மிக தொலைவில் இல்லை. அமைதியாக சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நல்லாட்சி ஒரு பதில் தர வில்லை என்றால் மீண்டும் ஒரு யுத்தம் பூதாகரமாக வெடிக்கும் என்பது மட்டும் உண்மை.