ஓபிஎஸ்- தீபா மோதலுக்கு இது தான் காரணம்: வெளியான பரபரப்பு தகவல்

ஓ.பன்னீர் செல்வம், ஜெ.தீபா ஆகிய இரு அணிகளுக்கு இடையே நிலவி வரும் கருத்து மோதலுக்கான காரணம் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜெயலலிதா சமாதியில் சந்தித்த ஓபிஎஸ், தீபா இருவரும் இனி இணைந்து செயல்படுவதாக அறிவித்தனர். ஆனால், இதன் பிறகு இருவரும் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடரவில்லை.

பன்னீர் செல்வத்தை சந்தித்த தீபா, கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இதற்கு ஓபிஎஸ் அணியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீபாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுப்பதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதை தீபா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்து போட்டியிடும் தீபா ஓபிஎஸ் அணியை விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் எங்களைப்பற்றி அவதூறாகப் பேசினால், தீபாவை குறித்து நாங்களும் பேசவேண்டி சூழ்நிலை ஏற்படும் என ஓபிஎஸ் அணியினர் எச்சரித்துள்ளனர்.