கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கலம்குன்னு பகுதியில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விட்ட சில நாட்களிலேயே அப்பளம்போல் பொரிந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். வியாபாரத்திற்கு அதிகம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே பயன்படுத்தி வருகிறார்கள். சில நாட்கள் புழக்கத்திலேயே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல் அரித்ததுபோல் மாறிவிடுகிறது.
அதே பகுதியை சேர்ந்த சிராஜ் (வயது 36) என்பவர் 10 இரண்டாயிரம் ரூபாய் தாள்களை வீட்டில் வைத்திருந்தார். நேற்று அவைகளை பார்த்தபோது அப்பளம்போல் பொரிந்து காணப்பட்டது. மேலும் எழுத்துக்கள், எண்கள் மற்றும் காந்தி படத்தின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து கிழிந்து விட்டன. அதிர்ச்சியடைந்த அவர் அங்குள்ள வங்கிக்கு சென்று புகார் செய்தார். பணத்தை மாற்றித்தருமாறு கேட்டார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகிறார்கள். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.