இந்தோனேசியா நாட்டில் மனிதனை விழுங்கக்கூடிய மலேசிய வகை மலைப்பாம்புகள் அதிகம் உள்ளன.
இங்குள்ள சுலவேசி தீவில் அக்பர் (வயது 25) என்ற வாலிபர் பாமாயில் தோட்டத்துக்கு காய் பறிப்பதற்காக சென்றிருந்தார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். எனவே, அவரை மற்றவர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில அந்த தோட்ட பகுதியில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று இரையை விழுங்கி உடல் பெருத்த நிலையில் படுத்திருந்ததை கண்டனர். அக்பரை அந்த பாம்புதான் விழுங்கி இருக்க வேண்டும் என கருதினார்கள்.
எனவே, அந்த பாம்பை பிடித்து வயிற்றை அறுத்தார்கள். உள்ளே அக்பரின் உடல் இருந்தது. உடலை வெளியே எடுத்தனர்.
இந்த பாம்பு 23 அடி நீளம் இருந்தது. பொதுவாக மலைப்பாம்புகள் மனிதனை விழுங்குவதில்லை. மனிதனை கண்டால் ஒதுங்கியே இருக்கும். வேறு உணவு கிடைக்காத நேரத்தில் அவை மனிதனை விழுங்குகின்றன.