ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ச!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பாரிய ஊழல்,மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடந்த ஊழல், மோசடி தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக நாமல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப சூழலில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு நாமல் ராஜபக்ச இன்று முற்பகல் 11 மணிளவில் சென்றுள்ளார்.