13 வயது சிறுமியின் துயர் போக்க மைத்திரியிடம் சென்ற மகிந்த!

விமலை விடவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய மகளே, அதனை கருத்திற் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

விமலை பார்வையிட தேசிய வைத்தியசாலைக்கு நேற்று சென்றிருந்த மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

மேலும், விமலின் போராட்டம் வெற்றியையே பெற்றுள்ளது. அவர் அரசின் முறையற்ற செயல்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினார். அந்த வகையில் அது வெற்றியடைந்துள்ளது.

இப்போது பிரச்சினை விமலை விடவும் அவருடைய மகளுக்கே. தந்தை தொடர்பில் அவர் மனவேதனை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அவர்.

அதனை கருத்திற் கொண்டு பிணை வழங்குவது என்பது விஷேடமான காரணமாகும். இது தொடர்பில் ஆலோசனை செய்யப்படும் என நான் நம்புகின்றேன்.

ஜனாதிபதியுடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். எமது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் மகிந்த தெரிவித்தார்.