ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்த விராட் கோலி இன்று அதில் இருந்து மாறுபட்டு விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-
ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியையும் இனி நண்பர்கள் இல்லை என்று சொன்னதாக அர்த்தம் இல்லை. ஒரு சில தனி நபர்களை மட்டுமே தெரிவித்தேன். சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.