ஐ.பி.எல். போட்டி: லோகேஷ் ராகுல் ஆடுவது சந்தேகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் தோள் பட்டையில் காயம் அடைந்தார். அடுத்து சிகிச்சை பெற விரைவில் லண்டன் செல்கிறார். இதனால் வருகிற 5-ந்தேதி தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம். லோகேஷ் ராகுல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார். ஏற்கனவே அந்த அணி கேப்டன் வீராட் கோலியும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரும் ஐ.பி.எல்லில் சில ஆட்டங்களில் விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது லோகேஷ் ராகுலும் விலக இருப்பது பெங்களூர் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.