ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 10ஆம் திகதி ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 ஆம் திகதி வரை ஜப்பானில் இருதரப்புச் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு 15 ஆம் திகதி வியட்நாம் செல்லும் பிரதமர் 19 ஆம் திகதி வரை வியட்நாமில் பல்வேறு சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளார்.
இதன்போது ஜப்பானிய பிரதமருடன் இலங்கையில் ஜப்பான் மேற்கொள்ளவுள்ள வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிரதமருடன் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலரும் இந்தப் பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.